SELANGOR

பழைய மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த இலவசமாக ஒரு நிறுத்த மையம் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 4: பழைய மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அவற்றை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (MPAJ) ஏற்பாடு செய்துள்ள கைவிடப்பட்ட கார்களுக்கான ஒரு நிறுத்த மையத்திற்கு அனுப்ப அழைக்கப்படுகிறார்கள்.

பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை நிர்வகிக்க உதவும் வகையில் புதிய திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

“இது பொதுமக்கள் தங்களின் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தானாக முன்வந்து அப்புறப்படுத்த உதவுகிறது

“இச்சேவை இலவசம், ஆனால் உரிமையாளர்கள் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நிர்ணயித்த சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர் சட்டப்பூர்வ உரிமையாளர், கடன் இல்லாத வாகனம், கருப்புப்பட்டியலில் இடம்பெறாமல் இருக்க வேண்டும் மற்றும் குற்றவியல் பதிவு இல்லாத விண்ணப்பதாரர் என சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.

ஆர்வமுள்ள அம்பாங் ஜெயா குடியிருப்பாளர்கள் intranet.mpaj.gov.my/spmkm இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம், 03-4285 7024 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

“விண்ணப்பதாரர்கள் மெனாரா எம்பிஏஜே, டெம்போ எம்பிஏஜே தாமான் புத்ரா சுலைமான் அல்லது டெம்போ எம்பிஏஜே தாமான் மெலாவத்தி ஆகிய இடங்களுக்கு வருகை புரியலாம்.

“ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்பிஏஜே அமலாக்கத் துறையை 03-42857024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்”.


Pengarang :