ANTARABANGSA

வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை இல்லை

தோக்கியோ, ஏப் 4 – வடகிழக்கு ஜப்பானில் ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான நிலநடுக்கம் இன்று  ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இன்று மதியம் 12.16 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் இவாத்தா, மியாகி மற்றும் புக்குஷிமா ஆகிய பகுதிகளில் ஜப்பானிய நில அதிர்வு தாக்க அளவீட்டில் 7 இல் 4 ஆக பதிவாகினதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலநடுக்கம்  புகுஷிமா பிராந்தியத்தின் கடலோரத்தில் பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் மையமிட்டிருந்தது.


Pengarang :