SELANGOR

மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டம் மூலம் 464.82 கிலோ உபரி உணவு சேகரிப்பு

ஷா ஆலம், ஏப் 4 : மைசேவ் ஃபுட்@பஜார் ரம்ஜான் திட்டம் மூலம் ஐந்து நாட்களில் கோலா சிலாங்கூரில் உள்ள ரம்ஜான் பஜார்களில் மொத்தம் 464.82 கிலோ உபரி உணவு வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது.

நலன்புரி இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மசூதிகள் உட்பட பல பகுதிகளுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது என கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.

“இந்தத் திட்டம் உணவு வீணாவதைத் தவிர்ப்பது மற்றும் உணவுக் கழிவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“விற்பனை செய்யாமல் மீதமுள்ள உணவை நலன்புரி இல்லங்கள் போன்ற தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்க வணிகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 27, 29 மார்ச் மற்றும் 1 முதல் 3 ஏப்ரல் வரை மேற்கொள்ளப்பட்ட உண்வு சேகரிப்பு ஏப்ரல் 5 மற்றும் 8 ஆம் தேதிகளில் தொடரும்.

“ஏப்ரல் 5 மற்றும் 8 ஆம் தேதிகளில், ஐஏடிஏ கோலா சிலாங்கூர் மற்றும் லோட்டஸ் கோலா சிலாங்கூர் முன் உள்ள ரம்ஜான் பஜார்களிலும் இந்நடவடிக்கை தொடரும்”.


Pengarang :