SELANGOR

ஐடில்பித்ரியை முன்னிட்டு சுமார் RM80,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப் 5: இந்த ஆண்டு ஹரி ராயா ஐடில்பித்ரியை முன்னிட்டு செந்தோசா தொகுதியின் சேவை மையம் நன்கொடையாக சுமார் RM80,000 ஒதுக்கியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ராயா உபகரணங்கள், அடிப்படைத் தேவைகள் மற்றும் அஸ்னாஃப்புக்கான ராயா பணம் ஆகியவை இந்த வார இறுதியில் வழங்கப்படும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.

“இந்த நன்கொடை வரவிருக்கும் ஹரி ராயா பண்டிகையைக் கொண்டாடும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், அத்துடன் அவர்களின் சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறேன்.

“மக்கள் பிரதிநிதி என்ற முறையில், குறிப்பாக பண்டிகைக் காலத்தில், வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதை உறுதி செய்ய முயற்சிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

நேற்று லாமன் மஸ்மிடா சுங்கை ஜாதியில் ஊடகவியலாளர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் செந்தோசா தொகுதியின் பிரதிநிதிகளுடனான நோன்பு துறப்பு விழாவிக்குப் பின்னர் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், செந்தோசா தொகுதியில் மொத்தம் 500 ஜோம் ஷாப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்கள் சமீபத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன.


Pengarang :