SELANGOR

மசூதி மற்றும் சூராவுகளுக்கு நன்கொடையாக RM39,000 ஒதுக்கீடு – புக்கிட் லஞ்சன் தொகுதி

ஷா ஆலம், ஏப் 5: புக்கிட் லஞ்சன் தொகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவுகளுக்கு நன்கொடையாக RM39,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நன்கொடை ரம்ஜான் மாதம் முழுவதும் வழிபாட்டு தள நிர்வாகம் நிகழ்ச்சிகளை எளிதாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் கூறினார்.

“மொத்தம் ஏழு மசூதிகள் மற்றும் இரண்டு சூராவுகள் RM2,000 பெற்றன. மேலும் 23 சூராவுகள் RM1,000 பெற்றன. இந்த நன்கொடை அவர்களின் சுமையைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“அதே நேரத்தில் புக்கிட் லஞ்சன் தொகுதியில் உள்ள விடுபட்ட  மசூதி மற்றும் சூராவ்களின் விண்ணப்பங்களை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால், நாங்கள் அதை அவ்வப்போது கவனிப்போம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அதுமட்டுமில்லாமல், புக்கிட் லஞ்சன் தொகுதியில் பஜார் வருகையாளர்களுக்கு RM5 கூப்பன்களை அவரது தரப்பு விநியோகித்ததாக வும் பெய் லிங் கூறினார்.

“இந்த திட்டமானது மக்களின் சுமையைக் குறைக்க உதவும். மேலும் பஜார்களில் உணவை வாங்குவதன் மூலம் வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்கும்.

“நாங்கள் நோன்பு திறக்கும் உணவுகளான பூபோர் லம்புக் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :