இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தும் ஐநா கோரிகையை மலேசியா வரவேற்கிறது

புத்ராஜெயா, ஏப்ரல் 6: இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை விற்பதை, தடுப்பதை  அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானத்தை மலேசியா வரவேற்கிறது.
வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) தீர்மானத்தை திறம்பட செயல்படுத்துவது உட்பட சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமை  நிறைவேற்றுவதை உறுதி செய்ய அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
“இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) முன்வைத்த தீர்மானம் மலேசியாவால் அனுசரணை செய்யப்பட்டு ஆதரிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பேரவையானது நீண்டகால சட்டவிரோத  ஆக்கிரமிப்பு, நிறவெறிக் கொள்கை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் போர் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் இருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க ஐ.நா சாசனத்தின் கீழ் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற மலேசியாவின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு  இணங்க இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இஸ்ரேல் செய்த குற்றங்கள், ”என்று விஸ்மா புத்ரா கூறினார்.
மலேசியா பாலஸ்தீனப் பிரச்சினைக்காகப் போராடுவதில் உறுதியாக உள்ளது மற்றும் 1967 க்கு முந்தைய கிழக்கு ஜெருசலமைத் தலைநகராகக் கொண்ட எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதை நோக்கி தொடர்ந்து பணியாற்றும்.
 நாடுகளின் தீர்மானம் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, காசாவில் பட்டினியை ஒரு போர் முறையாகப் பயன்படுத்துவதைக் கண்டித்தது மற்றும் ரஃபாவில் இஸ்ரேலின் எந்தவொரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் எச்சரித்தது.
2023 அக்டோபரில் இருந்து அதிகரித்துள்ள காஸா நெருக்கடியை சமாளிக்க மனித உரிமைகள் கவுன்சிலின் முதல் தீர்மானம் இதுவாகும்.
“கிழக்கு ஜெருசலம் உட்பட ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் நிலைமை மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கான கடப்பாடு” என்ற தலைப்பில் தீர்மானம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில்  47 உறுப்பு நாடுகளில் 6 எதிராகவும் 13   நடுநிலையுடன்   28 நாடுகளால்  அங்கீகரிக்கப் பட்டது.
அல்பேனியாவைத் தவிர OIC உறுப்பு நாடுகளின் சார்பாக பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட தீர்மானம், போர் நிறுத்தம், அணுகல் மற்றும் உடனடி அவசர மனிதாபிமான உதவிக்கு அழைப்பு விடுக்கிறது.

Pengarang :