NATIONAL

இலவச டோல் கட்டண சலுகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர், ஏப் 8: இன்று முதல் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டண சலுகையைச் சாலைப் பயனாளிகள் பயன்படுத்திக் கொள்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இன்று காலை 8 மணி நிலவரப்படி, வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளதாகவும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“பந்தாய் தீமோர் 1 மற்றும் 2 நெடுஞ்சாலைகளில் இதுவரை போக்குவரத்து சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், கேஎல்- காரக் நெடுஞ்சாலையில் (KLK) உள்ள கெந்திங் செம்பா சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பு போக்குவரத்து மெதுவாக நகர்கிறது,” என பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பொதுமக்கள் கட்டணமில்லா “PLUSLine“ 1-800-88-0000 மற்றும் X தளம் @plustrafik அல்லது LLM லைன் 1-800-88-7752 மற்றும் X தளம் @llmtrafik மூலம் சமீபத்திய போக்குவரத்து தகவலைப் பெறலாம்.

– பெர்னாமா


Pengarang :