SELANGOR

ஏப்ரல் 11 வரை சபாக் பெர்ணம் பகுதியில் ரோரோ தொட்டிகள் சேவை

ஷா ஆலம், ஏப் 9: சபாக் பெர்ணம் பகுதியில் வசிப்பவர்கள் மார்ச் 26 முதல் பல இடங்களில் வைக்கப்படும் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகள் மூலம் மொத்தக் குப்பைகளை எளிதாக அகற்றலாம்.

ஏப்ரல் 11 ஆம் தேதி வரை ஐடில்பித்ரியை முன்னிட்டு ரோரோ தொட்டிகள் வைக்கப்படும் இடங்களில் தாமான் இண்டா சிகிஞ்சான் மற்றும் கம்போங் பெனெராங்கன் ஆகியவையும் உள்ளடங்கும்.

சாதாரண மாதத்தில் ஒரு நாளுக்கு சுமார் 6,000 முதல் 7,000 டன்கள் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஐடில்பித்ரி போது இந்த அளவு 13 சதவிகிதம் அதிகரிக்கும் என்று KDEB கழிவு மேலாண்மை எதிர்பார்க்கிறது.

ஹரி ராயா காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குப்பை சேகரிக்கும் பணியில் 3,500 தொழிலாளர்களும், 1,300 குப்பை லாரிகளும் ஈடுப்படுத்தப் பட்டுள்ளன என அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.


Pengarang :