NATIONAL

3,850 பணிபுரியும் தாய்மார்களுக்கு மாமா கெர்ஜா ஊக்கத்தொகை

ஷா ஆலம், ஏப் 19: மார்ச் மாத நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 3,850 பணிபுரியும் தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு செலவுகளின் சுமையைக் குறைக்க, RM1,000 மதிப்பிலான மாமாகெர்ஜா “MamaKerja“ ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளனர்.

மாநில அரசு மொத்தம் 5,595 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், மீதமுள்ளவை ஆவண சரிபார்ப்பிற்காக ஆய்வு செய்யப்படுவதாகவும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முகநூலில் ஒரு சுருக்கமான அறிக்கையின் மூலம், விண்ணப்பதாரர் களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தை பராமரிப்புக்கான செலவு வேலை செய்யும் தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“மக்களின் நலனை மேம்படுத்தும் ஒரு முற்போக்கான அரசை உருவாக்குவதற்காக, இத்திட்டம் வேகமாக உருவாக்கப்பட்டு வரும் ‘கவனிப்பு-பொருளாதாரம்’ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

” வாய்ப்பிருந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கு மேலும் பல நலத்திட்டங்கள் உருவாக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட மாமா கெர்ஜா திட்டம், ஆகஸ்ட் 2023 மாநிலத் தேர்தலில் சிலாங்கூர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

RM5 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இத்திட்டம், RM8,000க்கு மிகாமல் குடும்ப வருமானத்துடன் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட 5,000 பணிபுரியும் பெண்களுக்குப் பயனளிக்கிறது.

தகுதித் தேவைகள் பின்வருமாறு:

  • வேலை மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள்

  • சிலாங்கூர் குடிமகன் (சிலாங்கூரில் பிறந்த  அல்லது 10 ஆண்டுக்கு மேல் இங்கு வசிப்பவர்களாக இருக்க வேண்டும்).

  • சிலாங்கூரின் வாக்காளராக.

  • RM8,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானத்துடன்

     உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) கணக்கு அல்லது சேமநிதி

     (EPF) பங்களிப்பு உள்ள நபர்கள்

  • அசோ பிந்தார், பிங்காஸ் மற்றும் துனாஸ் ஆகிய உதவிகளைப் பெறாதவர்கள்


Pengarang :