SELANGOR

குழாய்கள் கசிவு அல்லது வெடிப்பு சம்பவங்களைப் புகார் அளிக்கும் பயனர்கள், RM5 மதிப்புள்ள “Touch n Go டாப்-அப்“ வெல்லும் வாய்ப்பு

ஷா ஆலம், ஏப் 29: பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் செயலி மூலம் குழாய்களில் கசிவு அல்லது வெடிப்பு போன்ற சம்பவங்களைப் புகார் அளிக்கும் பயனர்கள், RM5 மதிப்புள்ள “Touch n Go டாப்-அப்“ பின்னை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் தனது தரப்பால் சரிபார்க்கப்படும் முதல் 2,000 புகார்களை அனுப்பும் நபர்கள் வெற்றியாளர்களாக மாற வாய்ப்பு இருப்பதாக ஆயர் சிலாங்கூர் தெரிவிக்கிறது.

“ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை, குழாய்களில் கசிவு குறித்து புகாரளிக்க ஆயர் சிலாங்கூர் செயலியில் உள்ள நீர் கசிவு அறிக்கை பொத்தானைக் கிளிக் செய்யவும்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

குழாயில் விரிசல் அல்லது சிறிய துளை ஏற்பட்டால், தண்ணீர் மெதுவாக வெளியேறும். இதன் மூலம், குழாயில் கசிவு ஏற்படுகிறது என்று அந்நிறுவனம் விளக்கியது.

அதேசமயம், குழாயில் பெரிய விரிசல் ஏற்பட்டால், குழாய் உடைந்து, அதிக அளவில் தண்ணீர் வெளியேறும்.

இந்த விலைமதிப்பற்ற சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத்தைப் பாதுகாப்பதில் பயனர்கள் பங்கு வகிப்பதை உறுதி செய்வதே நீர் கசிவு அறிக்கை பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுளது.

பயனர்கள் ஆயர் சிலாங்கூர் கசிவு அறிக்கை பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவல்களை https://www.airselangor.com/reportleakscampaign என்ற இணைப்பில் பெறலாம்.


Pengarang :