NATIONAL

பினோல் வாயுவை உள்ளிழுத்ததால் 4 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்

கூலிம், மே 2: லூனாஸில் உள்ள பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் இரண்டு தொழிலாளர்கள் பினோல் வாயுவை உள்ளிழுத்ததால்( ஃபினோல் (Phenol) என்பது C6H5OH என்ற மூலக்கூற்று  வாயு,, பீனாலிக் அமிலம். வெண்மை நிறத்தில் படிகத் திண்மமாகவும் காணப்படும்). தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை எதிர்நோக்கினர். மேலும் இரு தொழிலாளர்கள் அரை மயக்க நிலைக்குச் சென்றனர்.

 

நேற்று காலை 9.53 மணி அளவில் தனது தரப்புக்கு தொழிற்சாலை ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்ட தகவல் தெரிய வந்தது என கெடா மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) உதவி கண்காணிப்பாளர் ஹமிசுல் அஸ்வான் ஹம்டன் தெரிவித்தார்.

“காலை 10.12 மணியளவில் தீயணைப்பு இயந்திரம் சம்பவம் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பீனோல் வாயு என்ற இரசாயன கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

“சம்பந்தப்பட்ட அனைத்து ஆண் தொழிலாளர்களும் கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஹஸ்மாட் குழு தொழிற்சாலை பகுதியைச் சுற்றி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

“தற்போது சம்பவ இடத்தில் ஆபத்தான இரசாயன அளவீடுகள் எதுவும் இல்லை என்று கூலிம் ஹஸ்மாட் குழு உறுதி செய்துள்ளது. இந்நடவடிக்கை காலை 11.50 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :