NATIONAL

கிளந்தான் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும்  சமமான உரிமை – பிரதமருக்கு பாராட்டு

கோத்தா பாரு, மே 3: மற்ற மாநிலங்களைப் போல கிளந்தானுக்கும் சமமான உரிமையை அளித்ததற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குக் கிளந்தான் மந்திரி புசார் டத்தோ முகமட் நசுருடின் டாவுட் நன்றி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கிளந்தான் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்குப் பிரதமர் மிகச் சிறந்த பதிலை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

“மாநில அரசு தலைமை மற்றும் மூத்த அதிகாரிகளுடனான கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் நான் மக்கள் நலனுக்காகப் பல விஷயங்களை குறிப்பிட்டேன்.

“கிளந்தான் மாநிலத்தை மற்ற மாநிலங்களைப் போல நடத்துவதற்கும், விவாதிக்கப்பட்ட அனைத்திற்கும் நேர்மறையான கருத்துக்களை வழங்கியதற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என துன்ஜோங் கிராமப்புற உருமாற்ற மையத்தில் (ஆர்டிசி) மடாணி 2024 ஐடில்பித்ரி கொண்டாட்ட விழாவில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

முந்தைய தலைமை செய்தது போல் மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்த மாநில அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றார்.

“தோக் குரு நிக் அப்துல் அஜிஸின் காலத்திலிருந்து நாங்கள் மத்திய அரசுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். நான் இந்த மாநிலத்தை ஆளும் காலத்திலும் இந்த உறவு தொடரும்.

“என்னைப் பொறுத்தவரை, அரசியல் என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே. ஆணை வழங்கப்பட்ட பிறகு, மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :