ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்கள் ஒற்றுமைக்கும் தொடர்ந்து தொகுதி மேம்பாடு காண வாக்களியுங்கள்- மந்திரி புசார்.

உலு சிலாங்கூர், மே 4: மே 11ஆம் தேதி நடைபெறும் கோலா குபு பாரு (கேகேபி) இடைத்தேர்தலில் (பிஆர்கே) பாங் சோக் தாவின் வெற்றி, போக்குவரத்து நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட இந்தப் பகுதியை மேலும் மேம்படுத்தும்.

31 வயதான  பாங் சோக் தாவ், அரசாங்கத்துடன் ஒரே மாதிரியான கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தை  கொண்டுள்ளதை  கருத்தில் கொண்டு, மாநில அரசாங்கத்துடன்  இணைந்து நடப்பதன் வழி  சட்டமன்ற தொகுதி மக்களுடன்  சிறந்த தொடர்பாளராக இருப்பார் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“நாங்கள் சலுகைகள் மற்றும் திட்டங்களை  இந்த இடம் இன்னும் மேம்பட்டதாக இருக்க வழங்குகிறோம். எங்களை மாநிலத்துக்கு வெளியிலிருந்தும்  நாடுகிறார்கள். முன்னதாக இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உலு பெர்ணமுக்குச் சென்றேன். பேராக்கைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், லெஜெண்டா அரசு நிறுவனத்துடன் மற்றும் வீட்டு வசதிகளை வழங்க  இணைந்து  வேலை செய்ய விரும்புகிறது.

மே 3, 2024 அன்று உலு சிலாங்கூரில் பண்டார் உத்தாமா பத்தாங் கலியில் நடந்த நியூ கோலா குபு பிஆர்கே ஒற்றுமை மெகா ஒன்றுகூடலில் உரையாற்றிய போது டத்தோ டத்தோ மந்திரி புசார் கூறினார்.
“சில மாதங்களுக்கு முன்பு கோல குபு பாரு வளர்ச்சி ஒதுக்கீடு களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அதே நேரத்தில், மத்திய அரசும் மாநில அரசும் மாவட்ட மருத்துவமனையை மேம்படுத்தும் பணியை நிறைவு செய்தன.

“இது PRK வாக்குறுதி அல்ல, ஏனென்றால் ஜனவரி 2024 இல் நாங்கள் இத்திட்டங்களை முடித்துள்ளோம்.

முதல் சிலாங்கூர் திட்டத்திற்கு கூடுதலாக ECRL-ன் வளர்ச்சியுடன் மேலும்  தொகுதி வளர்ச்சிக்கு  வலு சேர்க்க விரும்பினால், ஒரு தெளிவான  திறமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று இரவு இங்கு ஒரு மெகா ஒன்று கூடலில் கூறினார்.

இந்த வாரப் பிரச்சாரப் பணிகளை பார்க்கும்போது, அவர் நம்பிக்கையுடன், ஒற்றுமை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க படுவதற்கு சரியானவர் என்று நம்புகிறார்.

சாக் தா வோ பிரச்சார நடவடிக்கைகளுக்கு அனைத்து இனத்தவர்களும் உள்ளடக்கிய வாக்காளர்களின் வருகை நல்ல பதிலுக்கான அறிகுறி  என்றார்
“மிக முக்கியமாக எல்லா திட்டங்களும், அனைத்து இடங்களுக்கும் பயனளிக்கும்  அதில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்  என எல்லோருக்கும் பயனளிப்பதை  உறுதி செய்யப்படுகிறது. மக்கள் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற செய்தியையும் நாங்கள் கொண்டு வருகிறோம்,” என்றார்.

கடந்த மார்ச் 21ஆம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீ ஹி யோங் (58) இறந்ததைத் தொடர்ந்து கேகேபி மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நான்கு முனை போட்டி நிலவுகிறது, சாக் தாவோ, 31, கைருல் அஸ்ஹரி சவுத் (பெரிக்காத்தான்  நேசனல்), ஹஃபிசா ஜைனுடின் பார்ட்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் நியாவ் கே சின் (சுயேச்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

DUN இல் 40,226 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 39,362 சாதாரண வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் மனைவிகள் மற்றும் வெளிநாட்டில்  உள்ள ஒருவர்.

தேர்தல் ஆணையம் KKB இடைத்தேர்தலை மே 11 வரை 14 நாட்கள் பிரச்சார காலமாக அறிவித்துள்ளது.


Pengarang :