NATIONAL

குடியிருப்பு பகுதிகளில் மினி நூலகம் உருவாக்க திட்டம் – பிபிஏஎஸ்

அம்பாங் ஜெயா, மே 6: டிடேக் சிலாங்கூர் திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மினி நூலகம் உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் ‘யூகே பெர்டானா வில் உள்ள ஸ்ரீ இம்பியான் பிளாட்டில் தொடங்கப்பட்ட மினி நூலகம் இத்திட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

இலவசமாகக் குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதாகச் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

இந்த மினி நூலகம் புத்தகங்கள், படிப்பதற்கு வசதியான இடம், கணினி, குளிர்சாதன வசதி மற்றும் இணையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என போர்ஹான் அமான் ஷா கூறினார். இதற்கு சிலாங்கூர் பொது நூலகக் கழகம் RM130,000 செலவழித்துள்ளது.

“இதுவரை மாநிலம் முழுவதும் 105 மினி நூலகங்கள் உள்ளன, இதில் ஸ்ரீ இம்பியான் பிளாடில் தொடங்கப்பட்ட நூலகமும் அடங்கும். இது குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட முதல் மினி நூலகம் ஆகும்.

“சிலாங்கூர் வீட்டுவசதி ஆணையத்துடன் (எல்பிஎச்எஸ்) இணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள குடியிருப்புகளில் இந்த மினி நூலகத்தை கட்டம் கட்டமாக தொடங்க பிபிஏஎஸ் இலக்கு வைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஒன்றாக படிப்பது, வீட்டுப்பாடங்களை செய்வது மற்றும் விளையாடுவது போன்ற செயல்களின் மூலம் குழந்தைகள் ஒரு இணக்கமான சூழ்நிலையில் கூடி பழகலாம்.

“இது எதிர்கால சந்ததியினரிடையே நெருக்கமான உறவுகளை உருவாக்கும். மதம், இனம் அல்லது குடும்ப பின்னணியில் உள்ள வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் சமூகத்தில் மேலும் ஒற்றுமையை வளர்க்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :