NATIONAL

அம்பாங் ஜெயாவில் மதிப்பீட்டு வரி உயர்வா? எதிர்க்கட்சிகளின் கூற்றில் உண்மையில்லை- அமிருடின் விளக்கம்

உலு சிலாங்கூர், மே 9- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம்
(எம.பி.ஏ.ஜே.) மதிப்பீட்டு வரியை உயர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள்
சுமத்திய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.

நகராண்மைக் கழகம் அனுப்பிய நோட்டீஸ், அங்கு வசிக்கும் மக்கள்
வசமிருக்கும் சொத்துடைமை விகிதத்தை மதிப்பீடு செய்ய
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்று அவர் சொன்னார்.

இதற்கு பின்னர் செலாயாங் நகராண்மைக் கழகத்தின் மீது இத்தகைய
குற்றச்சாட்டு கொண்டு வரப்படும். நாங்கள் மதிப்பைக் கண்டறிய
விரும்புகிறோம். விலை வீழ்ச்சி கண்டால் அது அரசாங்கத்தின்
தவறாகவும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி
கண்டதாகவும் பொருள்படும். நாமும் பதவியில் இருப்பதை மக்கள்
விரும்பமாட்டார்கள்.

வீட்டின் விலை வீழ்ச்சி கண்டால் பொருளாதார நடவடிக்கைகள் இல்லை
என்றும் விலை உயர்வு கண்டால் சொத்து மதிப்பு ஏற்றம் கண்டதாகவும்
கருதப்படும். இதுதான் மதிப்பீடாகும். வரியும் கூட மதிப்பீடு செய்ய
செய்யப்படும் என்றார் அவர்.

அரசாங்கம் வரியை உயர்த்துகிறது, அரசாங்கம் கொடுங்கோன்மையானது
என குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள்
மதிப்பிட்டை ஆட்சேபித்து மனு செய்ய முடியும் என்று நேற்று இங்கு
நடைபெற்ற கூட்டு பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கோல குபு பாரு இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக
முன்னாள் மந்திரி புசாரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களும்
இவ்விவகாரத்தை எழுப்பக் கூடாது என்று சிலாங்கூர் மாநில ஹராப்பான்
தலைவருமான அவர் சொன்னார்.

இது ஏமாற்று வேலை. மலாய்க்காரர்களின் நலன் காப்பதாக கூறுவோர்
மலாய்க்காரர்களை சிறுமைப்படுத்துகிறார்கள். இது பாவச் செயல்
என்பதோடு இதனை நான் எதிர்த்து போராடுவேன் என அவர் கூறினார்.

மாநில அரசு மதிப்பீட்டு வரியை உயர்த்துவதாகவும் இந்த வரி உயர்வு
நடப்பு மதிப்பை விட நான்கு மடங்கு வரை அதிகமாகும் என்றும்
பெரிக்கத்தான் நேஷனல் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது.

தற்போது 191.40 வெள்ளியாக இருக்கும் மதிப்பீட்டு வரி 429 வெள்ளியாக
உயர்வு காணும் என்றும் சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் தலைவர்
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறியிருந்தார்.


Pengarang :