NATIONAL

இந்திய சமூக நலனுக்காக மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது

ஷா ஆலாம், மே 9: இந்திய சமூகம் உட்பட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளிப்பதை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மீண்டும்  உறுதிப்படுத்தினார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்திய சமூகத் தலைவர்கள் உடனான சந்திப்பில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அந்த உறுதியை மீண்டும் உறுதிபடுத்திய தாகச் செய்தித் தொடர்பாளர் ஜே ஜே டெனிஸ் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களில் அவர்களிடம் சிறு தொழிலை ஊக்குவிக்கும்  மற்றும் வறுமை ஒழிப்பு திட்ட உதவியாக (புளூபிரிண்ட்) மற்றும்  சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு (சித்தம்)  ஆகியவை  வழங்கப்படும்  திட்டங்களில் ஒரு பகுதியாகும்.

மேலும், குடும்பங்களின் சுமையைக் குறைக்க, தமிழ்ப் பள்ளிகளுக்கான பள்ளி பேருந்து கட்டண மானியத் திட்டத்திற்கு மொத்தம் RM1.1 மில்லியனை மாநில நிர்வாகம் செலவழிக்கிறது.

மாணவர்களை வெற்றி பெற ஊக்குவிக்கும் வகையில், சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் (PTRS) அறிமுகப்படுத்தப்பட்டது, இது அனைத்து இன மக்களுக்கும் பயனளிக்கும்.

அதுமட்டுமில்லாமல், மாணவர்களின் வசதியை உறுதி செய்வதற்காக தமிழ்ப் பள்ளிகளுக்கும் வருடாந்திர உதவி வழங்கப்படுகிறது.


Pengarang :