NATIONAL

எஸ்.பி.எம் 2023இன் தேர்வு முடிவுகள் மே 27 அறிவிக்கப்படும்

புத்ராஜெயா, மே 9: எஸ்.பி.எம் 2023இன் தேர்வு முடிவுகள் மே 27 அன்று
அறிவிக்கப்படும்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை அவர்களின் பள்ளிகளில் காலை 10 மணி முதல்
பெறலாம் என்று கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முடிவுச் சீட்டு தபால் மூலம் அனுப்பப்படும் அல்லது
பதிவு செய்த மாநிலக் கல்வித் துறையை அவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 27 மே 2024 அன்று காலை 10 மணி முதல் ஜூன் 2, 2024 மாலை 6 மணி வரை
myresultspm.moe.gov.my என்ற இணைப்பின் மூலமும் தேர்வின் முடிவுகளைச்
சரிபார்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல், அடையாள அட்டை எண்ணைத் தட்டச்சு செய்து 15888க்கு
அனுப்புவதன் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி வழியாகவும்
சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் இந்த முறை 27 மே 2024 அன்று காலை 10 மணி முதல்
2 ஜூன் 2024 அன்று மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்.

எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கும் நடவடிக்கை
திறமையாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய
வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3,340 தேர்வு மையங்களில் எஸ்பிஎம் 2023 தேர்வு எழுத மொத்தம்
395,870 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.


Pengarang :