ANTARABANGSA

சுமார் 80,000 பேர் ரஃபாவிலிருந்து வெளியேற்றம்

கோலாலம்பூர், மே 10: கடந்த திங்கட்கிழமை இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப் பட்டதிலிருந்து சுமார் 80,000 பேர் ரஃபாவிலிருந்து வெளியேறியுள்ளதாக மேற்கு ஆசியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமை (UNRWA) தெரிவித்துள்ளது.

நேற்று UNRWA காசா பகுதியில் உள்ள மக்கள் மற்றொரு கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றனர் என ட்விட்டரில் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

“மே 6 அன்று இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டதால், சுமார் 80,000 பேர் பாதுகாப்புத் தேடி ரஃபாவிலிருந்து வெளியேறினர்.

“இந்த குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பம் தாங்க முடியாதது. பாதுகாப்பான இடம் இல்லை. எங்களுக்கு போர் நிறுத்தம் தேவை,” என்று கேட்டு கொள்ளப் பட்டது.

– பெர்னாமா


Pengarang :