NATIONAL

கோல குபு பாருவில் ஒற்றுமை அரசின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

உலு சிலாங்கூர், மே 10- கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு
இங்குள்ள மினி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒற்றுமை அரசின்
மாபெரும் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்
கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பக்கத்தான் ஹராப்பான் உதவித் தலைவர்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின்
நசுத்தியோன் இஸ்மாயில் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து
கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், அமானா கட்சியின்
துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசுப், தேசிய
முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல்
காடீர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் நாளை இடைத் தேர்தல் நடைபெறும்.


Pengarang :