NATIONAL

நாளை கோல குபு பாரு இடைத்தேர்தல்- 39,362 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவர்

உலு சிலாங்கூர், மே 10- பரபரப்புமிக்க கோல குபு பாரு இடைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள  வேளையில் அத்தொகுதியிலுள்ள 39,362 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

நாற்பது வாக்காளர்களைக் கொண்ட புக்கிட் பிரேசர், சீனப் பள்ளி வாக்குச் சாவடி தவிர 74 வாக்களிப்பு மையங்களை உட்படுத்திய அனைத்து 18 வாக்குச் சாவடிகளும் காலை 8.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும். புக்கிட் பிரேசர் வாக்குச்சாவடி பிற்பகல் 2.00 மணிக்கு மூடப்படும்.

வாக்குகளை எண்ணும் பணி உலு சிலாங்கூர் பல்நோக்கு மண்டபம் மற்றும் விளையாட்டுத் தொகுதியில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு சரிபார்ப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி, இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625 போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்களும் அவர்களின் துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க வாக்களிப்பின் போது போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களில் 97 விழுக்காட்டினர் அல்லது 769 பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று இறுதி நாளை எட்டிய நிலையில் வாக்காளர்களின் ஆதரவை முடிந்த அளவு திரட்ட அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேட்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல் சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

.கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் வரும் மே 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது

இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625 போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்களும் அவர்களின் துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Pengarang :