SELANGOR

கடன் பாக்கி விபரங்களை இணையம் வழி அறிய விரைந்து பதிவு செய்வீர்- ஹிஜ்ரா

ஷா ஆலம், மே 10- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் (ஹிஜ்ரா)
தொழில்முனைவோர் இப்போது தங்கள் வணிக கடன் பாக்கி தொடர்பான விபரங்களை
இணையம் வழி சரிபார்க்கலாம்.

இந்த நோக்கத்திற்காக சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர் http://mikrokredit.selangor.gov.my/ என்ற அகப்பக்கம் மூலம் தங்களைப் பதிவு செய்யலாம் என்று அந்த அறவாரியம் அறிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் பட்சத்தில் கிளை அலுவலகங்களில் உள்ள கடன் வசூலிப்பு
அதிகாரியைப் பார்க்கலாம். ஹிஜ்ரா சிலாங்கூர் நிதியளிப்பு பிரசுரங்களை பதிவிறக்கம்
செய்ய https://www.hijrahselangor.com/rilahan-skim-hijrah…/ இணைப்பை கிளிக் செய்யவும்.

ஹிஜ்ராவுடனான உங்கள் கடப்பாட்டிற்கு நன்றி என்று மாநில அரசின் அந்த கடனளிப்பு
நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிஜ்ரா, சிறு தொழில்களைத் தொடங்க அல்லது
வணிகங்களை மேம்படுத்த விரும்புவோருக்கு மூலதன கடனுதவியை வழங்கி வருகிறது.
ஐ-பிசினஸ்,  ஐ-பெர்மூசிம்,  நியாகா  டாருல் எஹ்சான்  (நாடி),  கோ டிஜிட்டல்   மற்றும்  ஜீரோ டு ஹீரோ  ஆகிய கடனுதவித் திட்டங்களை ஹிஜ்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 10 கோடி வெள்ளிக்கும் அதிகமான கடன் நிலுவைத்
தொகையை மீட்பதற்கான தீவிர முயற்சிகளில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக ஹிஜ்ரா
தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மரியா ஹம்சா கடந்த ஜனவரி 11ஆம்
தேதி கூறியிருந்தார்.

புதிதாகக் கடனுக்கு விண்ணப்பிப்போருக்கு நிதியளிப்பதற்கு ஏதுவாக ஹிஜ்ராவில்
கடன் 16,000 பேரிடமிருந்து கடனைத் திரும்ப வசூலிப்பது அவசியமாகிறது
என்றார் அவர்.


Pengarang :