NATIONAL

கஜகஸ்தானுக்குப் பிரதமர் இன்று பயணம்- புதிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம்

அஸ்தானா, மே 16 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொடங்கி இரு தினங்களுக்கு  கஜகஸ்தான் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு  இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒருங்கிணைப்பை உருவாக்க பிரதமரின் இப்பயணம் துணை புரியும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆககடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியப் பிரதமர் ஒருவர் அந்த  மத்திய ஆசிய நாட்டிற்குச் சென்றதாக கஜகஸ்தானுக்கான மலேசியத் தூதர் முகமது அட்லி அப்துல்ல,  கூறினார்.

கடந்த 1992ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி அரச தந்திர உறவுகள் தொடங்கிய பிறகு பல்வேறு துறைகளில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான மலேசியாவின் நிலைப்பாட்டை இந்த அதிகாரப்பூர்வ பயணம்  புலப்படுத்துகிறது.

இந்தத் துறைகளில் வர்த்தகம், முதலீடு, உயர்கல்வி, சுற்றுலா, ஹலால் தொழில் மற்றும் பல துறைகள் அடங்கும்  என்று பிரதமரின் வருகையை முன்னிட்டு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஹலால் தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்துகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற புதிய துறைகள் மற்றும் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை  பிரதமரின் வருகை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக  அட்லி கூறினார்.

மேலும், இந்த ஒத்துழைப்பு ஆசியான் நாடுகளுக்கான நுழைவாயிலாக மலேசியாவைப் பயன்படுத்த கஜகஸ்தானை ஊக்குவிக்கும். குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் அல்மாட்டி இடையே  இரண்டு மலேசிய விமான நிறுவனங்களால் வழங்கப்படும் நேரடி சேவை இதற்கு துணை புரியும் என்றார் அவர்.

தற்போது ஒவ்வொரு வாரமும் கோலாலம்பூருக்கும் அல்மாட்டிக்கும் இடையே நான்கு நேரடி விமானச் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் கஜகஸ்தானிலிருந்து மலேசியாவிற்கு 18,138 சுற்றுப் பயணிகள் வருகை புரிந்தனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 250 சதவீதம் அல்லது சுமார் 8,298 அதிகரித்துள்ளது  என்று அவர் கூறினார்.


Pengarang :