SELANGOR

சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய 46 லோரிகள் மீது எம்.பி.கே.ஜே. நடவடிக்கை

உலு லங்காட், மே 24- சட்டவிரோத குப்பை கொட்டும் பகுதிகளில்   கழிவுகளை கொட்டியதற்காக 46 குப்பை லோரிகளை காஜாங் நகராண்மைக் கழகம்  பறிமுதல் செய்தது .

இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை 253,000 வெள்ளி மதிப்புள்ள  அந்த  லோரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டதாக  நகராண்மைக் கழக தலைவர் நஸ்லி முகமது தாயிப் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையங்களில் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கை மூலம் அந்த லோரிகள் பறிமுதல் செய்யப் பட்டன என்று அவர் தெரிவித்தார்.

காஜாங் நகராண்மைக் கழகத்தின் 2007ஆம் ஆண்டு குப்பை சேகரிப்பு, அகற்றல் மற்றும் அழிப்பு விதியின் கீழ் இந்த அபராத விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று  இன்று நகராண்மைக் கழகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

சட்டவிரோத குப்பைக் கொட்டும் பகுதிகளில்  குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகளைத் தடுக்க தமது தரப்பு  தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று நஸ்லி குறிப்பிட்டார்

காஜாங் நகராண்மைக் கழக  நிர்வாகப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறோம்  என்று அவர் கூறினார்.


Pengarang :