ANTARABANGSA

ராஃபா கடப்புப் பாதை மூடப்பட்டதன் எதிரொலி- கெட்டுப் போகும் நிலையில் உணவுப் பொருள்கள் 

அல்-அரிஷ், மே 25- ராஃபா கடப்புப் பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ள காரணத்தால் பாலஸ்தீன மக்கள் கடந்த மூன்று வாரங்களாக கடும் பட்டினியால் வாடும் நிலையில் எகிப்திலிருந்து காஸாவுக்கு அனுப்புவதற்காக காத்திருக்கும் உணபுப் பொருள்கள் கடும் வெப்ப வானிலை காரணமாக கெட்டுப் போகத்  தொடங்கியுள்ளன.

மனிதாபிமான உதவிப் பொருள்களும் வர்த்தக பொருள்களும் காஸாவுக்கு நுழைவதற்கான பிரதான வாயிலாக ராஃபா விளங்கி வந்தது. எனினும், கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி அப்பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேலிய இராணுவம் அந்த பாலஸ்தீனத்திற்கான கடப்பு பாதையை மூடிவிட்டது.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மனிதாபிமான உதவிகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக எகிப்திய அதிகாரிகள் கூறினர். மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரப்படுவதற்கு ஏதுவாக அந்த கடப்பு பாதையை இஸ்ரேல் பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

காஸாவிலிருந்து பாலஸ்தீனர்கள் தனித்து விடப்படுவர் என அஞ்சும் எகிப்து எல்லைகளைத் மீண்டும் திறக்கும்படி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே பாலஸ்தீனத்திற்கு உலக நாடுகள் வழங்கிய மனிதாபிமானப் பொருள்கள் எல்லையைக் கடக்க முடியாத நிலையில் எகிப்திய பகுதியில் குவிந்து வருகின்றன.

லோரியில் ஏற்றப்பட்ட அப்பொருள்கள் பல மாதங்களாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவை கடுமையான சூரிய வெப்பத்தில் கெட்டுப் போகத் தொடங்கியுள்ளதாக லோரி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

ஆப்பிள்கள், வாழைப்பழங்கள், கோழி இறைச்சி போன்ற உணவுப் பொருள்கள் அழுகத் தொடங்கி விட்டன என்று அவர் சொன்னார்.


Pengarang :