MEDIA STATEMENTNATIONAL

கடுமையான வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவ விசாரணை அறிக்கை தயார் !

கோலாலம்பூர், மே 25- அம்பாங்கில் ஆசிரியர் ஒருவரால் கடும் வெயிலில் நிற்க வைத்த ஆரம்பப் பள்ளி மாணவர் மீதான விசாரணை அறிக்கையை காவல்துறை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறுகையில், பாதிக்கப் பட்டவரின் தாய், 34, தனது குழந்தை, 11, ஏப்ரல் 30 அன்று, விளையாட்டு திடலின் நடுவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெயிலில் நிற்க வைத்து ஒரு ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

உள்ளூர் ஆசிரியரான 37 வயதுடைய சந்தேக நபர், பாதிக்கப்பட்ட மாணவருடன் மேலும் மூன்று நண்பர்களையும் சேர்ந்து 10 நிமிடங்களுக்கு தண்டித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

“மருத்துவ அதிகாரியின் சோதனையில் பாதிக்கப் பட்டவருக்கு வெப்பச் சோர்வு ஏற்பட்டது தெரியவந்தது. விசாரணை முடிந்துவிட்டது, மேலும் நடவடிக்கைக்காக சிலாங்கூர் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று  தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் தாயார் அரசு சாரா நிறுவனத்துடன் (என்ஜிஓ) விசாரணை நடத்தப் பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்ததைக் காட்டும் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது.
குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக முகமது ஆசம் கூறினார்.


Pengarang :