SELANGOR

மொத்தக் கழிவுகளை சேகரிக்க ரோரோ தொட்டிகள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஜூன் 5: ஷா ஆலம் மாநகராட்சியில் 384 பகுதிகளில் மொத்த கழிவுகளை சேகரிக்க ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளை KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) வழங்கியுள்ளது.

ஐடிலாடா கொண்டாட்டத்தை முன்னிட்டு பயன்படுத்திய பொருட்களை மக்கள் எளிதாக அப்புறப்படுத்த எம்பிஎஸ்ஏ உடன் இணைந்து இத்திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்தது.

“ரோரோ தொட்டிகள் மே 27 முதல் ஜூன் 15 வரை மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு செக்‌ஷன் 2, 3, 4, 5, 6, 8 மற்றும் 13 ஆகிய இடங்களில் வைக்கப்படும்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

மொத்தக் குப்பை சேகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள், கேள்விகள் மற்றும் புகார்களை “iClean Selangor“ செயலி மூலம் மேற்கொள்ளலாம் என்றும் KDEB கழிவு மேலாண்மை தெரிவித்துள்ளது.

இந்த செயலி மொத்த கழிவுகளை அகற்றும் சேவைகளுக்கு விண்ணப்பிப்பதுடன், திடக்கழிவு சேகரிப்பு புகார்களை இணையம் வழி தெரிவிப்பதை பொதுமக்களுக்கு எளிதாக்குகிறது.

கடந்த ஆண்டு, இந்த செயலி PC.Com விருதுகளின் 23வது பதிப்பில் சிறந்த பொது சேவை விண்ணப்ப விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை பொதுமக்கள் கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம், மேலும் வாடிக்கையாளர் சேவையை 1-800-88-2824/019-375 9592 அல்லது வாட்சாப் (019-274 2824) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம், புகார்கள் விரைவாகக் கையாளப்படும்.


Pengarang :