SELANGOR

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேகக் கல்வித் திட்டம் 

ஷா ஆலம், ஜூன் 5 – மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கல்வித்திட்டத்தை  சிலாங்கூர் அரசாங்கம் தொடங்க உத்தேசித்துள்ளது என்று பெண்கள் உரிமை மற்றும் நலனுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.

வார இறுதியில் இந்த முன்மொழிவை டெக்னாலஜி மாரா பல்கலைகழகம் (யுஐடிஎம்) மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தும் அமைப்பான பெர்மாட்டா குர்னியா முன்வைத்ததாக அவர் கூறினார்.

“வெளியிடப்படும் தொகுதி குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு கையேடாக அல்லது குறிப்பு பொருளாகச் செயல் படுத்தலாம் என் நம்பிக்கை  தெரிவித்தார்

“இத்திட்டம் அனிஸ் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை தங்கள் திறனுக்கு ஏற்றவாறு நிர்வகிப்பதில் பெற்றோருக்கு உதவுவதற்கான மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று அவர் நேற்று X இல் பதிவிட்டுள்ளார்.

குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கல்வி தொகுதிகளை உருவாக்குவது மற்றும் பெற்றோரின் ஈடுபாட்டை மேம்படுத்துவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அன்பால் விளக்கினார்.

முன்னதாக, முதல் சிலாங்கூர் திட்டத்தின் கீழ், சிலாங்கூரில் உள்ள குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக 12க்கும் மேற்பட்ட திட்டங்களை அரசு கோடிட்டுக் காட்டியுள்ளதாக அன்பால் கூறியிருந்தார்.


Pengarang :