SELANGOR

நாளை அதிகாலை 3.00 மணி முதல் பயனீட்டாளர்கள் கட்டங் கட்டமாக நீர் விநியோகத்தைப் பெறுவர்

ஷா ஆலம், ஜூன் 5 – பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக பணி
நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர்
சுத்திகரிப்பு மையத்திலிருந்து நீர் விநியோகம் பெறும் பயனீட்டாளர்கள்
நாளை அதிகாலை 3.00 மணி தொடங்கி நீர் விநியோகத்தைக கட்டங்
கட்டமாகப் பெறத் தொடங்குவர்.

அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில் பழுதுபார்ப்பு மற்றும் கருவிகளை
மாற்றும் பணி இன்று காலை தொடங்கி துரித கதியில்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம்
கூறியது.

சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு
பணிகள் இன்று காலை 9.00 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இப்பணிகள் இரவு 7.00 மணிக்கு முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

பயனீட்டாளர்கள் நாளை அதிகாலை 3.00 மணி தொடங்கி நீர்
விநியோகத்தை கட்டங் கட்டமாகப் பெறத் தொடங்குவர் என
எதிர்பார்க்கப்படுகிறது என அந்நிறுவனம் குறிப்பிட்டது.

பொது மக்கள் நீர் விநியோகம் தொடர்பான தகவல்களை பேஸ்புக்,
இண்ட்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளம் தவிர்த்து
https://waterupdates.airselangor.com/ என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து
கொள்ளலாம்

மேலும் 15300 என்ற தொலைபேசி எண்கள் அல்லது https://www.airselangor.com/
என்ற இணைப்பின் வாயிலாகவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தை
தொடர்பு கொள்ள முடியும்.


Pengarang :