SELANGOR

அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி- பெவிலியன் சிலாங்கூர் வருகையாளர்களைப் பெரிதும் ஈர்த்தது

கோலாலம்பூர், ஜூன் 6- இங்கு கடந்த வாரம் நடைபெற்ற 41வது கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தக விழா 18 லட்சத்திற்கும் மேற்பட்ட வருகையாளர்களை ஈர்த்தது.

கடந்த மே மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை கோலாலம்பூரின் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சியில் ஈரான், இந்தியா, சீனா, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 241 பங்கேற்பாளர்கள் 972 கண்காட்சிக் கூடங்களில் தங்களின் புத்தகங்களை காட்சிக்கு
வைத்திருந்தனர்.

சிலாங்கூர் மாநில அரசும் சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பி.பி.ஏ.எஸ்.) வாயிலாக பெவிலியன் சிலாங்கூர் எனும் காட்சிக் கூடத்தை நிறுவியிருந்தது. ‘வீட்டுடமை, சொத்துடைமை, நீடித்த சுற்றுச்சூழல், கல்வி‘ என்ற கருப்பொருளை இந்த பெவிலியன் சிலாங்கூர் கொண்டிருந்தது.

சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்கள் தொடர்பான தகவல்களை காட்சிப்படுத்தியிருந்த இந்த பெவிலியன் சிலாங்கூருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஆட்சிக்குழு உறுப்பினர்களான பொர்ஹான் அமான் ஷா, நஜ்வான் ஹலிமி, அன்ஃபால் சாரி ஆகியோர் வருகை புரிந்தனர்.


Pengarang :