MEDIA STATEMENT

முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக ஜெய்ன் பெற்றோரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

காஜாங், ஜூன் 8- ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீனின் பெற்றோர் அளித்த வாக்குமூலத்தில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால்  அத்தம்பதியினரின் காவல் உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது

விசாரணையை விவரிக்கும் அதே வேளையில்  பொருள் ஆதாரம் மற்றும் சம்பவம் நடந்த இடம் உட்பட வழக்கு தொடர்பான அனைத்து சிக்கல்களையும் முடிக்க இந்த கால அவகாசத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என்று  சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் கூறினார்.

தீர்க்கப்பட வேண்டிய முரணற்ற விஷயங்கள் நிறைய  உள்ளன. அதனால்தான் விசாரணை முடிவுகளில் திருப்தி அடையும் வரையில், மேல் விசாரணைக்கும்    ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதைத் தீர்ப்பதற்கும் எங்களுக்கு இன்னும் ஆறு நாட்கள் தேவை என்று அவர் தெரிவித்தார்.

காஜாங்கில் உள்ள தாமான் ரக்கானில் இன்று நடைபெற்ற அரச மலேசிய போலீஸ் படையின் சிலாங்கூர் தலைமையகத்தின்  அமானித்தா எனப்படும் அமான் வனித்தா அமைப்பின் தாமான் தத்தெடுப்பு நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஜெய்ன் ரய்யான கொலை வழக்கு தொடர்பான  விசாரணைக்கு உதவும் பொருட்டு அவனது  பெற்றோருக்கு எதிரான தடுப்புக் காவலை மேலும்   6 நாட்களுக்கு நீட்டிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று  முன்தினம் அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவின் டாமன்சரா டாமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஓடையில் ஜைன் ரய்யானின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டிஸம் குறைபாடு  கொண்ட அச்சிறுவனின் உடல் மீது மேற்கொள்ளப்பட்டச் பரிசோதனையில் அவர்  கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.  தற்காத்துக் கொள்ளப் போராடியதற்கான அறிகுறியாக அச்சிறுவனின்  கழுத்து மற்றும் உடலில்  காயங்கள் காணப்பட்டன.


Pengarang :