SELANGOR

சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் தொழில்முனைவோருக்கான சிறப்பு நிதித் திட்டம் – ஹிஜ்ரா

ஷா ஆலம், ஜூன் 10: தொழிலை மேலும் மேம்படுத்த சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் தொழில் முனைவோருக்கான சிறப்பு நிதித் திட்டத்தை (பிளாட்ஸ்) யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் வழங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கும் RM3,000 தொழில் முனைவோர் தங்களின் சந்தையை குறிப்பாக டிஜிட்டல் முறையில் விரிவாக்க உதவுகிறது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பிளாட்ஸ் தொழில்முனைவோருக்கு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் நோக்கில் ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் எம்பிஐயின் ஒத்துழைப்பால் இத்திட்டம் உருவானது என அவர் விளக்கினார்.

“ஆரம்ப கட்டத்தில், 120 தொழில்முனைவோருக்கு நிதியுதவியாக ரிங்கிட் 3,000 வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்

மேலும், இத் தொழில் முனைவோர் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் தக்கா ஃபுல் நிதியுதவியையும் பெறுவர் என ஹிஜ்ராவின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

பிளாட்ஸ் நிதியுதவியைப் பெற்ற தொழில் முனைவோர் ஒரு வருட காலத்தில் தவணை முறையில் கடன் செலுத்தலாம் மற்றும் அவர்கள் ஹிஜ்ரா மைக்ரோ கிரெடிட் திட்டத்தின் மூலம் கூடுதல் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என டத்தோ மரியா ஹம்சா கூறினார்

மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த திட்டம் உதவியது என எம்பிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி சாய்போல்யாசன் எம்.யூசோப் கூறினார்.

கடந்த ஆண்டு, 12 உள்ளூர் அதிகாரிகளின் ஈடுபாட்டின் மூலம் வணிகங்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் U-பிளாட்ஸ் திட்டத்தை எம்.பி.ஐ உருவாக்கியது.


Pengarang :