NATIONAL

பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு நபர்களின் உறவினர்களுக்கு நன்கொடை – பிரதமர்

அலோர் காஜா, ஜூன் 10: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பகாங்கின் ஜாலான் குவாந்தான்-செகாமட்டில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு நபர்களின் உறவினர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரிங்கிட் 40,000 நன்கொடையாக வழங்கினார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM10,000 நன்கொடை, பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையானது மிகவும் கடினமான நிலைக்கு உள்ளான குடும்பங்கள் மீது பிரதமரின் மற்றும் அரசாங்கத்தின் அக்கறையின் அடையாளம் என்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் ஷம்சுல் இஸ்கண்டார் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவ அயராது உழைத்த அனைத்து மீட்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் நன்றி தெரிவித்தார்.

“மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, எதிர்காலத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :