SELANGOR

சாலையில் தண்ணீர் பாய்ந்ததன் விளைவாகச் 16 வீடுகள் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 11: ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் சாலையில் பாய்ந்த  வேகமான வெள்ளநீர் தாமான் டேசா மெலூர், செரெண்டாவில் உள்ள 16 யூனிட் வீடுகளில்  புகுந்தது உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

இது போன்ற சம்பவங்களை  தவிர்க்க, அங்குள்ள  வடிகால்களை சுத்தம் செய்ய தேவைப்படும் இயந்திரங்கள் தனது தரப்பு வழங்கும் என பத்தாங் காலி தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

“நேற்று மாலை 6.30 மணிக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சுங்கை டுரியானில் ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதாக அறியப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அடைப்பட்ட  நீரோடைகள் கனமழையின் போது வலுவான நீரோட்டத்தை சமாளிக்க முடியாமல் போனது,” என்று சைபுடின் ஷாபி முஹமட் கூறினார். மேலும், குடியிருப்பாளர்கள் ஒப்புக் கொண்டவுடன் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்திற்கு அருகில் உள்ள சிற்றோடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதும் ஒரு காரணம் என விளக்கினார்.

இது போன்ற சம்பவங்களை  சமாளிக்க உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையுடன் முக்கிம் செரெண்டா  பெங்குலு அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்துவார் என்றும் அவர் கூறினார்.


Pengarang :