NATIONAL

மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதை கணவர் ஒப்புக்கொண்டார்- ஜூலை 18ஆம் தேதி தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூன் 11-  தனது மனைவியை மோப் கட்டை,  பேஸ்பால் மட்டையால் தாக்கியதோடு  வெள்ளை பிளாஸ்டிக் நாற்காலியை அவர் மீது எறிந்ததாக  இங்குள்ள செஷனாஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை  ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த மே மாதம் 5ஆம் தேதி மாலை 3.00 மணியளவில்  ஜாலான் ஈப்போ, தாமான் ரெயின்போ, செந்தூலில் உள்ள ஆடம்பர  அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி சுக்விந்தர் கவுருக்கு எதிராக இத்தாக்குதலை நடத்தியதாக 45 வயதான இந்தர்ஜித் சிங் குற்றம் சாட்டப்பட்டார்.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இவற்றில் ஏதாவது ஒரு தண்டனை வழக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 324/326A  பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

முன்னதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரை 10,000 வெள்ளி ஐஈமீனில் விடுவிக்க அரசுத் தர்ப்பு வழக்கிறஞர்  தலைமை வழக்கறிஞர் ராயா சித்தி நர்ஸ்யுஹாடா அப்துல்  ரவூப் பரிந்துரைத்தார். எனினும், வழக்கறிஞர் யாரும் பிரதிநிதிக்காத இந்தர்ஜிட்,  தனக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதால்  குறைந்த ஜாமீனில் விடுவிக்கும்படி  கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை  4,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதியளித்த நீதிபதி ஹமிடா முகமது டெரில், தீர்ப்பை  ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :