NATIONAL

நச்சு உணவால் மரணம் – உடனடி விசாரணை

ஷா ஆலம், ஜூன் 11: நேற்று கோம்பாக்கில் நச்சு உணவினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் மரணம் குறித்து, கல்வி மற்றும் சுகாதாரத் துறையிடமிருந்து மாநில அரசு விரிவான விளக்கம் பெற விரும்புகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“பாதிக்கப்பட்டவரில் ஒருவர் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஆவர்.

இதுகுறித்து கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் மாநில அரசு விரிவான விசாரணை நடத்தி வருகிறது என முகநூலில் தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அமீருடின் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், கோம்பாக்கில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட மீகோன் மற்றும் பொரித்த முட்டையை சாப்பிட்டதால் இரண்டு வயது குழந்தையும், 17 வயது மாணவரும் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட 17 வயது மாணவன் தனது தாயார் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப் பட்டதாகத் தெரிகிறது.

மேலும், குறிப்பிட்ட இரண்டு வயது சிறுமி, அப்பள்ளியில் பணிபுரியும் காவலாளியின் மகள் ஆவார்.


Pengarang :