NATIONAL

இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மேத்தா- எம்.சி.எம்.சி. ஒத்துழைப்பு

கோலாலம்பூர், ஜூன் 13 – இணையப் பாதுகாப்பு நடைமுறை தொடர்பில்
தேசிய நிலையிலான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள மலேசிய தொடர்பு
மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் இதர பங்காளிப்பாளர்களுடன்
இணைந்து செயல்பட மேத்தா இணக்கம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரையும் உள்ளடக்கிய இந்த இணைய
பாதுகாப்பு பிரச்சார இயக்கம் விரைவில் தொடங்கப்படும் என்று தகவல்
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நடத்தப்பட்ட சந்திப்பின் போது மேத்தா
வழங்கிய கடப்பாட்டின் அடிப்படையில் மலேசியாவில்
பயனீட்டாளர்களுக்கான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான
முயற்சிகள் குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டது என்று தனது பேஸ்புக்
பதிவில் அவர் தெரிவித்தார்.

பதிமூன்று வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு வயதைச் சரிபார்த்தல்,
இணைய சூதாட்டம், பொய்ச் செய்திகள், 3ஆர் (இனம்,சமயம் மற்றும்
ஆட்சியாளர்கள்) விவகாரங்களும் இதில் அடங்கும் என்று அவர்
சொன்னார்.

இணைய பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக
எதிர்மறையான உள்ளடக்கங்களை குறைப்பதற்கு மேத்தா எடுத்துள்ள
முயற்சிகளை வரவேற்பதோடு இந்த கடப்பாட்டினை அந்த நிறுவனம்
தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :