SELANGOR

ஹஜ்ஜூப் பெருநாளின் போது 5,340 டன் குப்பைகளை கே.டி.இ.பி.வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் அகற்றியது

ஷா ஆலம், ஜூன் 19- ஹஜ்ஜூப் பெருநாளின் முதல் நாள் தொடங்கி
நேற்று முன்தினம் வரை மொத்தம் 5,340.10 டன் குப்பைகளை கும்புலான்
டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் (கே.டி.இ.பி.டபள்யூ.எம்.)
நிறுவனம் அகற்றியுள்ளது.

அவற்றில் 4,797.13 டன் குப்பைகள் வீடுகளிலிருந்து அகற்றப்பட்ட
வேளையில் 542.97 டன் குப்பைகள் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
துப்புரவு நடவடிக்கையின் போது சேகரிக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி தாஹிர் கூறினார்.

மாநிலம் முழுவதும் உள்ள 384 இடங்களில் மொத்தம் 4,397
தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். ஹஜ்ஜூப் பெருநாள்
உள்பட அனைத்து தினங்களிலும் குப்பைகளை அகற்றும் கடமையை
கே.டி.இ.பி.டபள்யூ.எம். நிறுவனம் தொடர்ந்து நிறைவேற்றி வரும் என
அவர் தெரிவித்தார்.

இந்த குப்பை அகற்றும் பணியில் 939 லோரிகள் பயன்படுத்தப்பட்டதாகக்
கூறிய அவர், கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு குப்பைகளின் அளவு
குறைந்துள்ளது என்றார்.

இன்னும் பல கடைகள் திறக்கப்படாதது இம்முறை குப்பைகளின் அளவு
குறைந்ததற்குக் காரணம் என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :