SELANGOR

ஆரம்பப் பள்ளி அளவிலான ஆக்கப்பூர்வமான இன நடனப் போட்டியில் RM8,300 ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், ஜூன் 19: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ள ஆரம்பப் பள்ளி அளவிலான ஆக்கப்பூர்வமான இன நடனப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் RM8,300 ரொக்கப் பரிசு காத்திருக்கின்றன.

அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம். எதிர்வரும் ஜூலை 11 ஆம் தேதி, காலை 8 மணிக்கு எம்பிஏஜே ஆடிட்டோரியம், நிலை 5, மெனாரா எம்பிஏஜே பண்டா இண்டாவில் இப்போட்டி நடைபெறும்.

இப்போட்டியில் முதல் இடத்திற்கு RM1,500, இரண்டாவது இடத்திற்கு RM1,000, மூன்றாவது இடத்திற்கு RM800, சிறப்பு நடுவர் பிரிவிற்கு RM500, சிறந்த ஃபேஷன் மற்றும் டாடாரியாக்களுக்கு RM500 மற்றும் முதல் 20 பதிவுகளுக்கு RM200 மதிப்புள்ள ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

“இப்போட்டியில் குறைந்தபட்சம் ஆறு மாணவர்கள் மற்றும் அதிகபட்சம் 10 மாணவர்கள் கொண்ட குழுக்கள் பங்கேற்க முடியும்.

பங்கேற்பதற்கான நிபந்தனைகளை தெரிந்து கொள்ள https://forms.gle/K8pJV5wYu2mjF4Qn8 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு 017-820 4448 (அஷ்ரஃப்) அல்லது 011-7302 4108 (சாகியா) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்,” என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :