SELANGOR

வீடுகளில் தொழில் முறை குழந்தை பராமரிப்பு செய்பவர்களுக்கு  இலவசப் பயிற்சி  பட்டறை – பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 19: உலு கிள்ளான் தொகுதியில் வீடுகளில் தொழில் முறை  குழந்தை பராமரிப்பாளர்கள், குழந்தைகள் மேம்பாட்டு தொடர்பான பட்டறையில் இலவசமாகப் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

ஜூன் 29 முதல் இரண்டு நாட்களுக்கு அடிப்படை குழந்தை பராமரிப்பு பட்டறையை யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க 50 பராமரிப்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி திட்டத்தின் (இம்பேக்) கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பராமரிப்பாளர்களுக்கு RM2,000 மதிப்புள்ள மானியங்களும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இதற்கு முன் குழந்தை பராமரிப்பு தொடர்பான எந்தவொரு பட்டறையிலும் கலந்து கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட வீட்டு குழந்தை பராமரிப்பாளர்கள் இந்த பட்டறையில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் சிலாங்கூர் வாக்காளராக இருத்தல் அவசியமாகும்.

மேலும் தகவல் மற்றும் பதிவு படிவத்தை https://bit.ly/daftarKIPK என்ற இணைப்பின் மூலம் பெறலாம்.

வழங்கப்படும் பாடத் தொகுதிகளில் சட்டம், வணிக அடிப்படைகள், மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை அடங்கும்.

அதுமட்டுமில்லாமல், அதில் ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவு, பாதுகாப்பு மேலாண்மை, அடிப்படை முதலுதவி, நெருக்கடி மேலாண்மை மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.


Pengarang :