SELANGOR

31 சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பாராட்டு விழா – செந்தோசா தொகுதி

ஷா ஆலம், ஜூன் 20: செந்தோசா தொகுதியில் மொத்தம் 31 சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பாராட்டு விழா நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

எஸ்பிஎம் 2023க்கான விருது வழங்கும் விழா, மாணவர்கள் தொடர்ந்து வெற்றி அடைய ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.“8A மற்றும் அதற்கு மேற்பட்ட முடிவுகளைப் பெற்று சிறந்து விளங்கிய செந்தோசா தொகுதி மாணவர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது.

“எஸ்பிஎம் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான முதல் சவாலாகும், கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள இது ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அளிக்கிறது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

உற்சாகம் வழங்குவதில் சோர்வடையாத மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்குக் குணராஜ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.


Pengarang :