SELANGOR

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

ஷா ஆலம், ஜூன் 20: கோலா குபு பாரு தொகுதியில் எஸ்பிஎம் தேர்வில் (2023) சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

தேர்வில் குறைந்தபட்சம் 5A பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 20 வரை (இன்று) இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவோ கூறினார்.

மேலும், RM100 (5A), RM150 (6A), RM200 (7A), RM250 (8A), RM300 (9A) மற்றும் 10A மற்றும் அதற்கு மேல் RM350 வழங்கப்படும் என அவர் கூறினார்.

” மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் கோலா குபு பாரு தொகுதியின் வாக்காளராக இருப்பதும் அவசியம்” என்று சோக் முகநூலில் தெரிவித்தார்.

தகுதியுடைய மாணவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdxk-79e9Dgzt6NuE3IYpQ7UgW-JDGCO-YbBeBNait6aaFOw/viewform?usp=sf_link என்ற இணைப்பில் பதிவு செய்து, பிறப்புச் சான்றிதழ் மற்றும் 2023 தேர்ச்சி முடிவின் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யலாம் என்று அவர் கூறினார்.

மொத்தம் 11,713 எஸ்பிஎம் 2023 விண்ணப்பதாரர்கள் அனைத்து பாடங்களிலும் A+, A மற்றும் A- தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.

முந்தைய ஆண்டு 4.74 ஆக இருந்த தேசிய சராசரி தரம் (GPN) இவ்வாண்டு 4.60 ஆகப் பதிவு செய்துள்ள நிலையில் மாணவர்களின் சாதனை சிறப்பாக உள்ளது.


Pengarang :