NATIONAL

விரைவுப் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது

லஹாட் டத்து, ஜூன் 21: நேற்றிரவு  9 வது மைல்  ஜாலான் சிலாம் எனும் இடத்தில் விரைவுப் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இரவு 9.24 மணிக்கு நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சபா மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவம் இடத்திற்கு ஏழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், இச்சம்பவம் குறித்து தகவல்கள் அவ்வப்போது புதுபிக்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :