SELANGOR

டேட்டா & டிஜிட்டல் ஹேக்கத்தான் 2024 போட்டியில் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் வெற்றி பெற்றனர்

ஷா ஆலம், ஜூன் 21: சமீபத்தில் ஆயர் சிலாங்கூர் நடத்திய டேட்டா & டிஜிட்டல் ஹேக்கத்தான் 2024 போட்டியில் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

ஃப்ரெஷ் ஆயர் என்று அழைக்கப்படும் குழுவானது ஹைட்ரோரைஸ் சென்டினல் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. இது சிலாங்கூர் நீர் விநியோக குழாய் அமைப்பில் கசிவைக் கண்காணிக்கவும் ஊகிக்கவும் உதவும் ஒரு கண்டுபிடிப்பு ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

“தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான தளமாக, டேட்டா & டிஜிட்டல் ஹேக்கத்தான் 2024ஐ மலேசியாவில் முதன் முறையாக நடத்தும் முதல் நீர் சேவை வழங்குநர் என்ற பெருமையை நாங்கள் பெற்றுள்ளோம்“, என அந்நிறுவனம் தெரிவித்தது.

“அம்மாணவர்கள் அறிவியல் தரவு செயலிகளைப் பயன்படுத்தி நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டு சிக்கலான பெரிய தரவுத் தொகுப்புகளைத் தீர்த்தனர். இது நீர் சேவைத் துறையின் டிஜிட்டல் மயமாக்கலின் முன்னேற்றத்திற்கு பங்களித்தது” என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ஃப்ரெஷ் ஆயர் குழு RM10,000 ரொக்கப் பரிசை வென்றது. அதை ஆயர் சிலாங்கூரின் செயல் தலைமை அதிகாரி அபாஸ் அப்துல்லா வழங்கினார்.

விமானப்படை குழு இரண்டாம் இடத்தையும் மற்றும் தி ஹேக்ஸ்மித் மூன்றாம் இடத்தையும் வென்றது. அதே நேரத்தில் 149 குழுக்கள் போட்டியிட்ட பணியாளர்கள் பிரிவில் நீரோஸ் வெற்றி வாகை சூடியது.


Pengarang :