NATIONAL

உலகம் முழுவதும் போலி நீரிழிவு மருந்துகள் விநியோகம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா, ஜூன் 21: கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உலகளவில் போலி நீரிழிவு மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம்  நேற்று அறிக்கை மூலம் எச்சரித்துள்ளது.

கடத்தாண்டு அக்டோபர் முதல் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் பிரத்தியேகமாக  கண்டுபிடிக்கப்பட்டதை  சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது

சம்பந்தப்பட்ட மருந்தின் பெயர் ஒஸேம்பிக் (Ozempic ) ஆகும். இது ஆக்க மூலப்பொருளான செமகுளுடைடைக் கொண்ட மருந்து ஆகும், இரண்டாம் வகை  நீரிழிவு நோய் சிகிச்சைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

போலி மருந்து உண்மையான மருந்தை ஒத்ததாக இருக்கிறது. இந்த மருந்து  பசியை கட்டுபடுத்துவதால் எடை குறைப்புக்கு  இது அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

இருப்பினும், போலி மருந்துகளில் சரியான அளவு ஆக்கப்பொருள் இல்லாமல் இருக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாடற்றதாக ஆக்கும் என  அந்த உலக சுகாதார அமைப்பு கூறியது.  உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் பிற ஆக்கப் பொருட்களையும் அந்த மருந்து கொண்டிருக்கலாம் என்றும் அது எச்சரித்தது.

ஆகவே, இந்த மருந்து விஷயத்தில் மருத்துவர்கள், மருந்தாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.

மக்கள் இணையம் வாயிலாக அல்லாமல்  மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் அது ஆலோசனை கூறியது.

இன்சுலின் பேனாவில் டோஸ் அளவு சரியாகக் காட்டப்படுவதையும், லேபிள் சரியாக இருப்பதையும், அட்டைப் பெட்டியில் எழுத்துப் பிழைகள் ஏதும் இல்லை என்பதையும் பயனீட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Pengarang :