NATIONAL

பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் பயணித்த நான்கு பேர் காயமடைந்தனர்

லஹாட் டத்து, ஜூன் 21: நேற்றிரவு இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் ஒரு நடத்துனர் உட்பட 19 பேரை ஏற்றிச் சென்ற விரைவு பேருந்து 9 வது மைல், ஜாலான் சிலாம் எனும் இடத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 4 பேரும் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், லஹாட் டத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிறர் லேசான காயம் அடைந்ததாகவும் லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் தலைவர் சும்சோவா ரஷிட் கூறினார்.

“செம்போர்னாவிலிருந்து கோத்தா கினபாலு வுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 50 மீட்டர் சாய்வு கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்தது. அதில் சிக்கி கொண்ட சில நபர்கள் தாங்களாகவே பேருந்திலிருந்து வெளியேறினர்,” என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்றிரவு இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்தது. உடனே, லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் 20 உறுப்பினர்கள் மற்றும் சிலம் தன்னார்வ தீயணைப்பு படையினர் மூவர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

– பெர்னாமா


Pengarang :