SELANGOR

இரண்டு தொகுதிகளில் இலவசச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம்

ஷா ஆலம், ஜூன் 23: கோம்பாக் செத்தியா மற்றும் பந்திங்
தொகுதிகளில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதார பரிசோதனைத்
திட்டம் இந்த மாதத்தின் மத்தியில் மீண்டும் நடைபெறும்.

இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கோம்பாக் செத்தியா மக்கள் சேவை மையத்திலும் (ஜூன் 29) மற்றும் ஸ்ரீ ஜுக்ரா மண்டபம், பந்திங்கிலும் (ஜூன் 30) ​​நடைபெறவுள்ளது.

இதயம், சிறுநீரகம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், கண்கள், காதுகள்
மற்றும் பற்கள் போன்ற சுகாதார பரிசோதனைகளை வழங்கும் இத்திட்டத்தில்
பங்கேற்குமாறு சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் பொதுமக்களை
அழைக்கிறார்.

“செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

”செலங்காவில் பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 1800 226 600
என்ற எண்ணில் “Selcare“ஐ தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில்
தெரிவிக்கப்பட்டது.


Pengarang :