SELANGOR

அஸ்லி இளைஞர் ஸ்டார் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு RM800 ரொக்கப் பரிசு

ஷா ஆலம், ஜூன் 23: எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள அஸ்லி இளைஞர் ஸ்டார் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு RM800 ரொக்கப் பரிசை சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் வழங்குகிறது.

இப்போட்டிக்கான விண்ணம் ஜூலை 5 வரை திறந்திருக்கும் மற்றும் கட்டணம் வசூலிக்கப்படாது. இதில் பங்கேற்க 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஆண் மற்றும் பெண் பிரிவில் 15 முதல் 25 வயதுடைய நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், பங்கேற்பாளர்கள் ஒரு பாடலை மட்டுமே பாட முடியும்.

பங்கேற்பாளர்கள் போட்டியில் மலாய் பாரம்பரிய தனிப்பாடல் மட்டுமே பாட முடியும்.

வெற்றியாளருக்கு RM400 ரொக்கம் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இரண்டாம் வெற்றியாளருக்கு RM300 மற்றும் மூன்றாம் வெற்றியாளருக்கு RM100 வழங்கப்படும்.

இரண்டு பிரிவுகளின் வெற்றியாளர்கள் சபாக் பெர்ணமை பிரதிநிதித்துவப்படுத்தி மாநில அளவில் மற்றும் அதற்கு அப்பால் நடைபெறும் இதே போன்ற போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்டிஎஸ்பி சமூக மேம்பாட்டுத் துறை ஊழியர்களான முகமட் பைசல் 017-618 0589 அல்லது ஷரில் 011-2801 3936 ஆகியோரை என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :