ANTARABANGSA

காஸா போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,598 பேராக அதிகரிப்பு

காஸா, ஜூன் 23- இஸ்ரேலிய இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில்
மூன்று இனப்கொலைச் சம்பவங்களை காஸாவில் நிகழ்த்தியுள்ளது.

இச்சம்பவங்களில் 47 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 121
பேர் காயமடைந்தனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் இஸ்ரேலிய இராணுவம்
காஸா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 37,598
பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 86,032 பேர்
காயமுற்றதாக மருத்துவ வட்டாரங்கள் கூறின.

இந்த கோரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர்
பெண்கள் மற்றும் சிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, மீட்பு பணிகளை மேற்கொள்வதிலிருந்து ஆம்புலன்ஸ்
மற்றும் பொது தற்காப்பு பிரிவினரை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்து
வருவதால் குண்டு வீச்சுத் தாக்குல்களில் பாதிக்கப்பட்டவர்களையும்
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் காப்பாற்ற இயலாத
நிலையில் மீட்புப் பணியாளர்கள் உள்ளனர்.


Pengarang :