SELANGOR

விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த சுபாங் ஜெயா தொகுதி RM53,648.50 ஒதுக்கீடு

சுபாங் ஜெயா, ஜூன் 24: USJ11 பொது மைதானம் மற்றும் SS17 கூடைப்பந்து மைதானத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த சுபாங் ஜெயா தொகுதி RM53,648.50 ஒதுக்கீடு செய்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தனது தரப்பு மைதனத்தின் இரண்டு பகுதிகளிலும் பந்து தடை வலையை நிறுவியதாகச் சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் சீ கூறினார்.

“கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலின் போது, மைதானத்திற்கும் நடைபாதைக்கும் இடையே தூரம் மிக சிறியதாக இருப்பதால், அவ்விரு மையங்களுக்கு இடையே பந்து தடைகளின் அவசியத்தை தெரிவித்த சமூகத்திடமிருந்து இந்த கோரிக்கையை நான் பெற்றேன்.

“இந்த திட்டத்திற்கு மாநில சட்டமன்ற உறுப்பினரின் ஒதுக்கீடு பயன்படுத்தப் பட்டது. USJ 11 பொது மைதானக் கட்டுமானச் செலவு RM19,591 ஆகும். அதே நேரத்தில் SS17 கூடைப் பந்து மைதானத்தை மேம்படுத்தும் செலவு RM34,057.50 ஆகும்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை பந்தால் தாக்கப் பட்டதாகவும், அச்சமயம் கைப்பேசி கீழே விழுந்து அதற்கு சேதம் ஏற்பட்டதாகவும் குடியிருப்பாளர் ஷெர்லி சின் (75) தெரிவித்தார். எனவே, பந்து தடுப்பு வலையை நிறுவும் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த பந்து தடுப்பு இருப்பதால், அருகிலுள்ள பகுதியில் நிறுத்தப்படும் கார்கள் பந்தால் சேதமடைவதை தவிர்ப்பதோடு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கும் அதிக உத்தரவாதம் அளிப்பதாக, அவர் கூறினார்.

இந்த திட்டத்தால் வருகையாளர்கள் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என  SS17 குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் தே எங் ஹாக் கூறினார்.

“நான் எப்போதும் குழந்தைகளை விளையாட்டு மைதானத்திற்கு விளையாட அழைத்துச் செல்வேன், ஆனால் அது கூடைப் பந்து மைதானத்திற்கு அருகில் அமைந்திருப்பதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன்.

“இந்த வசதியால், குடியிருப்பாளர்கள் இனி கவலைப்பட வேண்டாம். அவர்கள் இந்த வசதியை நன்றாகப் பராமரிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என அவர் கூறினார்.


Pengarang :