SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தின் இலவச மின்சாரப் பேருந்து சேவை

ஷா ஆலம், ஜூன் 24: பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகத்தில் (எம்பிபிஜே) இலவச மின்சார பேருந்தை சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

பெட்டாலிங் ஜெயாவை 2030க்குள் கார்பன் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டமாக இரண்டு மின்சார பேருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மின்சார பேருந்தில் பயணித்த தெங்கு அமீர் ஷா, பயனீட்டாளர், புறநகர் பாரம்பரியக் கிராம மேம்பாடு  ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பல சுவாரஸ்யமான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில், எம்பிபிஜே சமூகத்திற்கு இலவச பேருந்து சேவையை வழங்கி 10 ஆண்டுகள் ஆகியுள்ளன என பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

“எம்பிபிஜே முயற்சியின் மூலம் 2008ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு மூன்று முறை சமுதாய பேருந்து சேவை வழங்கப்பட்டது. பின்னர் நாங்கள் ஏப்ரல் 2014இல் இலவச பேருந்துகளை அறிமுகப்படுத்தினோம்.

“இப்போது இந்த சேவை பெட்டாலிங் ஜெயா முழுவதும் 211 நிறுத்தங்களுடன் 112.5 கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடைந்துள்ளது. மேலும், 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பேருந்து சேவை வழங்கப்படுகிறது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், 2017 இல் மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் மூலம் மிக அதிகமாக இலவசப் பேருந்து சேவைகளை வழங்கும் ஊராட்சி மன்றமாக எம்பிபிஜே அங்கீகரிக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா பொதுப் போக்குவரத்துக் கொள்கை 2030 ஐ வெற்றியடையச் செய்வதில் எம்பிபிஜே உறுதி பூண்டுள்ளதாகவும், இதனால் நகரம் 100 சதவீத பொது வசதிகளுடன் காணப்படும் என்றும் அவர் விளக்கினார்.

2030ஆம் ஆண்டுக்குள், பெட்டாலிங் ஜெயாவை 100 சதவீத பொது வசதிகளுடன் உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த திட்டத்தை சுற்றியுள்ள சமூகம் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :